வனத்தைப் பாதுகாக்கவா?... அல்லது அழிக்கவா?
வனப் பாதுகாப்புச் சட்டம் (Forest Conservation Act)1980, அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் சர்வாதிகாரத் தன்மையை கொண்டிருந்தார். மாநிலப் பொறுப்பில் இருந்த வனத்துறையைப் பொதுப் பிரிவுக்கு மாற்றியவர் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. சுற்றுச்சூழல் ஆர்வலரான அவர், அன்றைய சூழலில் காடுகளைப் பாதுகாக்கும் முயற்சியில் பல மாநில அரசுகள் தீவிரமாகச் செயல்படவில்லை என்கிற காரணத்தால் புதிய சட்டத்தைக் கொண்டுவந்ததோடு, இந்திய ஒன்றியத்தின் முதல் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. மாநில அரசுகளைவிட ஒன்றிய அரசே காடுகளின் பாதுகாப்புக்கு எதிராகச் செயல்படுகிறதாக சுற்றுசூழல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. இந்திரா காந்தி வனப்பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றிய பிறகு, காடு சாரா காரணங்களுக்காகக் காட்டு நிலங்களை ஒதுக்குவது பெருமளவில் குறைந்திருந்தது. நாடு விடுதலை அடைந்த முதல் 30 ஆண்டுகள் காலத்தில் 40 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் அவ்வாறு ஒதுக்கப்பட்டிருந்தன. புதிய சட்டத்தின் விளைவாக கடந்த 30 ஆண்டுகளாக அது 10 லட்சம் ஹெக்டேராகச் சுருங்கியது என்கிறார்கள் சுற்றுசூழல் ஆர்வலர்கள்.
வன பாதுகாப்புச் சட்டம் என்பது காட்டைப் பாதுகாக்கும் சட்டமல்ல. அது காட்டு நிலங்களின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் ஒரு சட்டமேயாகும். பின்னர், தொடர்ச்சியாக நடைபெற்ற பல சட்டத்திருத்தங்களால் நிலைமை மேலும் மோசமடைந்தது. மாநிலங்களவையில் சுற்று சூழல் அமைச்சகம் அளித்த தகவலின்படி 2008-2019 காலத்தில் 2,51,727 ஹெக்டேர் காட்டு நிலம் காட்டு சாரா பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே டெல்லி மாநிலத்தின் பரப்பளவை போல 1.5 மடங்கு அதிகம்.
அரசு அனுமதி மட்டும் போதுமா?
தனியார் காடுகள் மற்றும் வருவாய்க் காடுகள் உள்ளிட்ட நிலங்களை வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்த தற்போதுள்ள சட்டப்படி வனத் துறையின் அனுமதி தேவைப்படுகிறது. அதை முற்றிலும் நீக்கவே இந்தச் சட்டத்திருத்தம் முனைகிறது. உண்மையில், காடுகளைப் பாதுகாக்கும் சட்டம் என்றால், அது வன உரிமைச் சட்டம் 2006ல் தான் எனலாம். காப்புக்காடுகள்(Forest reserves) உள்ளிட்ட எந்தக் காட்டு நிலமாக இருந்தாலும், அதைக் காடு சாராத பயன்பாட்டுக்கு அரசாங்கம் மட்டுமே முடிவெடுத்து வழங்கிவிட முடியாது. அதற்குப் பழங்குடிகளின் கிராம சபை ஒப்புதல் தேவை. இந்த உரிமையைக் கிராம சபைக்கு வன உரிமைச் சட்டம் வழங்கியுள்ளது. அதனால்தான் காடுகள் மீதான பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்புகளைப் பழங்குடிகளால் தடுத்து நிறுத்த முடிந்துள்ளது.
எடுத்துக்காட்டாக, 2013-ல் ஒடிசா காட்டுக்குள் பாக்சைட் சுரங்கம்(Bauxite mining) அமைக்க அம்மாநில அரசின் சுரங்கக் கழகம் வழங்கிய அனுமதியைப் பழங்குடிகளின் 12 கிராம சபைகள் தடுத்து நிறுத்தியதைக் குறிப்பிடலாம். எனவே, இந்தப் புதிய சட்டத்திருத்த வரைவு, மறைமுகமாக வன உரிமைச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கையோ என்கிற அச்சம் இயல்பாகவே எழுகிறது. காரணம், ஒரு பழைய சட்டத்துக்கும் புதிய சட்டத்துக்கும் முரண்பாடு தோன்றினால், வழக்கில் புதிய சட்டமே செல்லுபடியாகும். அது மட்டுமல்லாமல், 2013-க்குப் பிறகு காடுகளின் பாதுகாப்பு சார்ந்திருந்த சட்டங்கள் ஒவ்வொன்றாகத் தளர்த்தப்பட்டுவிட்டன.
கையில் இருப்பதை இழக்கலாமா?
புதிய திருத்த வரைவில் காட்டு நிலப் பகுதிகளைக் கையகப்படுத்துவதை, "2006 வன உரிமைச் சட்டத்திலேயே குறிப்பிட்ட காட்டு நிலத்தை 'முக்கியத்துவம் வாய்ந்த வனவிலங்கு வாழ்விடம்’ (Critical Wildlife Habitate) என்று அறிவித்தால், அதைக் காடு சாராத பயன்பாட்டுக்கு வழங்க முடியாது என்ற விதிமுறை உள்ளது. அதாவது, அச்சட்டம் ஏற்கெனவே இங்கு இருக்கிறது.
காடு சாரா பயன்பாடுகளை ஆதரிக்கும் பொருளியல் வாதங்கள் வழக்கம்போலவே 'உயிரினப் பன்மை'(Biodiversity) என்பதைக் கணக்கில் கொள்வதில்லை. Biodiversity விலைமதிப்பற்றது என்பதையும் உணர்வதில்லை. அது மட்டுமன்றி, பருவநிலை மாற்றம் குறித்த IPCC(Intergovernmental Panel on Climate Change)-ன் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் எச்சரிக்கையை இந்த சட்டத் திருத்த வரைவு கேலிசெய்கிறது. கையில் இருக்கும் காடுகளை அழித்துவிட்டு பருவநிலை மாற்றத்தை எப்படிக் கட்டுப்படுத்தப் போகிறோம்?
காடழிக்கப்பட்ட நிலத்துக்கு ஈடாக இரு மடங்கு நிலத்தில் புதிய காடு உருவாக்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால், அங்கு எவ்வகைத் தாவரங்களை வளர்க்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டுதல்கள் ஏதுமில்லை. எனவே, ஓரினப் பயிர்த் தோட்டங்களே(Monoculture farms) காடு என்ற பெயரில் உருவாக்கப்படுகின்றன. ஓரினப் பயிர்களின் தோட்டம் அசல் காட்டைவிடக் குறைவான கார்பனையே வளிமண்டலத்திலிருந்து ஈர்த்துக்கொள்ளும் என்பதே உண்மை.
கூடுதல் அழுத்தம் தேவைதமிழ்நாடு அரசின் தனியார் வனப் பாதுகாப்பு 1949 சட்டத்தை, ஒருவிதத்தில் நல்லதொரு சட்டமாகச் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் கருதுவார்கள். ஆனால், ஒன்றிய அரசின் புதிய வரைவு, மாநில அரசின் வனப் பாதுகாப்புச் சட்டத்திலும் கைவைக்க முனைகிறது. காடுகளில் தன் அதிகாரத்தை நிறுவ பிரிட்டிஷ் அரசு வனப் பாதுகாப்புச் சட்ட வரைவு ஒன்றைக் கொண்டுவந்தபோது, அதை முதலில் எதிர்த்தது மெட்ராஸ் மாகாணம்தான் என்கிற வரலாற்று உண்மையை இங்கு நினைவில் கொள்வது அவசியம்.
The Forest Rights Act (FRA), 2006
The act recognizes the rights of the forest dwelling tribal communities and other traditional forest dwellers to forest resources, on which these communities were dependent for a variety of needs, including livelihood, habitation and other socio-cultural needs.
New amendments in Forest Conservation Act
The Union Ministry of Environment, Forest and Climate Change (MoEF&CC) released a consultation paper October 2, 2021 on the proposed amendments in Forest Conservation Act, 1980 with reference to the amendments made in 1988 in this Act.
It aims to bring significant changes to forest governance in India including facilitating private plantations for harvesting and exploration or extraction of oil and natural gas deep beneath forest land by drilling holes from outside the forest areas.
Bauxite mining in the Niyamgiri hills:
The Environment and Forest Ministry of Government of India scrapped a forest clearance given to a mining firm, Vedanta Resources, to mine bauxite in the area and the mining project was scrapped. In 2013, the Supreme Court of India asked the Niyamgiri gram sabha tribal people to take the decision, in which the project was rejected in all village council meetings. The gram sabhas are being held for the first time in the country on a directive by the Supreme Court to verify claims that mining in Niyamgiri — the seat of power of Niyamraja, the ‘ista debata’ (presiding deity) of the locals — would violate their religious and cultural rights. This is the only village, located in an interior area, where Gowds have lived for several centuries. All other villages are home to Dongria Kondhs, a tribal group.
The Niyamgiri is a hill range situated in the districts of Kalahandi and Rayagada in the south-west of Odisha, India. These hills are home to Dongria Kondh indigenous people. The hills have one of India’s most pristine forests in the interior. It is bound by Karlapat Wildlife Sanctuary on the north-west side and Kotgarh Wildlife Sanctuary on the north-east end.
Mining in Niyamgiri for the one million tonne bauxite refinery of the Vedanta located at Lanjigarh near this area, would trigger an environmental disaster by drying up the hill streams and spoiling the rich ecosystem of the area.
IPCC assessment
The IPCC Working Group I sixth assessment report shows that the world will probably reach or exceed 1.5 degrees C (2.7 degrees F) of warming within just the next two decades. Whether we limit warming to this level and prevent the most severe climate impacts depends on actions taken this decade.
Only with ambitious emissions cuts can the world keep global temperature rise to 1.5 degrees C, the limit scientists say is necessary for preventing the worst climate impacts. Under a high-emissions scenario, the IPCC finds the world may warm by 4.4 degrees C by 2100 — with catastrophic results.
Climate change and Forest protection
Forests regulate ecosystems, protect biodiversity, play an integral part in the carbon cycle, support livelihoods, and supply goods and services that can drive sustainable growth. Forests’ role in climate change is two-fold. They act as both a cause and a solution for greenhouse gas emissions.
What is Monoculture farming?
Monoculture farming is a form of agriculture that is based on growing only one type of crop at one time in a specific field. In contrast, a polyculture system assumes that a field is sown with two or more crops at a time. When talking about monoculture crops, it is important to note that even if a different culture is planted on a given field plot each year, the concept of growing a single crop on one field at a time is still referred to as ‘Monoculture’forming.