உலகளவிலான பட்டினிக் குறியீட்டில் இந்தியா 101-வைது நாடாக வரிசைப்படுத்தப்பட்டிருப்பதை மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Women & Child Development, Government of India) ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த ஆண்டு பட்டினிக் குறியீட்டில் இடம்பெற்ற 107 நாடுகளில் இந்தியா 94-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 116 நாடுகளில் 101-வது இடத்தித்துக்குச் சரிந்துள்ளது.
பட்டினிக் குறியீடு(Hunger Index) போதுமான கள நிலவரங்களையும் தரவுகளையும் கொண்டிருக்கவில்லை என்பதோடு, அதன் ஆய்வு முறைகளையும் அறிவியல்பூர்வமானதாக இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது. மக்கள்தொகையில் சத்தான உணவு கிடைக்கப் பெறாதவர்களின்(Undernourishment) விகிதாச்சாரம் குறித்த, உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO-Food and Agriculture Organization) மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்தப் பட்டினிக் குறியீடுகள் அமைந்துள்ளன என்றும், இந்த அறிக்கையை வெளியிட்ட சர்வதேச அமைப்புகளான 'Concern Worldwide, Welthungerhilfe' ஆகியவை தங்களது ஆய்வை முறையாகச் செய்யவில்லை என்றும் மத்திய அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. ஐநா அமைப்பின் சிறப்பு முகமைகளில்(specialized agencies) ஒன்றான உணவு மற்றும் விவசாய அமைப்பு (Food and Agriculture Organization), உலகம் முழுவதும் பட்டினியை ஒழிக்கவும், சத்துணவு மற்றும் உணவு பாதுகாப்பை மேம்படுத்தவும் செயல்பட்டுவரும் அமைப்பாகும். உணவுப் பாதுகாப்பு தொடர்பாக உலகளாவிய ஆய்வுகளை ஏறக்குறைய 75 ஆண்டுகளாக நடத்திவரும் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆய்வுகள் அறிவியல் பூர்வமானவை அல்ல என்ற இந்தியாவின் கருத்து பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. சத்துணவுக் குறைப்பாட்டை அளவிடுவதற்கு உயரம், உடல் எடை முதலான அளவீடுகளைக் கணக்கில் கொள்வதே அறிவியல்பூர்வமானதாக இருக்க முடியும்; ஆனால் தொலைபேசி வழியாகக் கேள்விகளைக் கேட்டு அவற்றின் அடிப்படையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக குறை கூறியுள்ளது, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவின் மக்கள்தொகை முழுமைக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்திட மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டினிக் குறியீட்டு அறிக்கை கவனத்தில் கொள்ளாததைச் சுட்டிக்காட்டியிருக்கும் அமைச்சகம், அது குறித்து அனைத்துத் தரவுகளும் பார்வைக்கு கிடைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே ஜனநாயகக் குறியீட்டில்(Democracy Index) இந்தியாவின் இடம் குறித்த கேள்வியும் இதே விதமாகத்தான் எதிர்கொள்ளப்பட்டு வருகிறது. ஜனநாயகக் குறியீட்டு அறிக்கையை (Democracy Index Report) ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் லண்டனைச் சேர்த்த EIU(Economic Intelligence Unit) அமைப்பு, தனது முடிவுகளை எவ்வாறு வந்தடைகிறது என்ற விவரங்கள் வெளிப்படையாக சொல்லப்படவில்லை என்பதும், அரசு அமைப்புகளை கலந்தாலோசிக்காமலேயே அந்த முடிவுக்கு வருகிறது என்பதும் இந்தியாவின் பார்வையாக உள்ளது. பெருட்தொற்றுக் காலத்தில் இந்தியா போன்ற மிகுந்த மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் எத்தகைய பொருளாதாரச் சரிவுகள் ஏற்படும் என்பதும் புரிந்து கொள்ளக்கூடியதுதான். அதன் தொடர்ச்சிதான் பட்டினிக் குறியீட்டுக்கான தற்போதைய எதிர்வினையும். உலகத்தின் பார்வையில் இந்தியாவின் மதிப்பு குறைந்து விடக்கூடாது என்பது என்னவோ சரிதான். அதே நேரத்தில், மொத்த மக்கள் தொகையில் உணவு பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பவர்களின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும், அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் உணவு மானியங்களைக் குறைக்க வேண்டும் என்பது போன்ற நிதி ஆயோக்(Finance Commission) பரிந்துரைகளை மத்திய அரசு மக்களின் மீதான பரிவுணர்ச்சியோடு பரிசீலிக்க வேண்டும்.
-தி இந்து(21.10.2021)
According to the Index, only 15 countries fare worse than India. They are Papua New Guinea (102), Afghanistan and Nigeria (103), Congo (105), Mozambique and Sierra Leone (106), Timor-Leste (108), Haiti (109), Liberia (110), Madagascar (111), Democratic Republic of Congo (112), Chad (113), Central African Republic (114), Yemen (115) and Somalia (116).
India was also behind most of the neighbouring countries. Pakistan was placed at 92, Nepal and Bangladesh at 76 and Sri Lanka at 65.
The Government has contested the performance of these neighbouring countries on the Index.
“It is noted with surprise, from the FAO report ‘The State of Food Security and Nutrition in the World 2021’, that other four countries of this region — Afghanistan, Bangladesh, Nepal and Sri Lanka — have not been affected at all by COVID-19 pandemic induced loss of job/business and reduction in income levels, rather they have been able to improve their position on the indicator ‘proportion of undernourished population’ by 4.3%, 3.3%, 1.3% and 0.8% points respectively during the period 2018-20 over 2017-19,” the statement adds.
The GHI scores are based on the values of four component indicators — undernourishment, child wasting, child stunting and child mortality. Based on the values of the four indicators, the GHI determines hunger on a 100-point scale, where 0 is the best possible score (no hunger) and 100 is the worst. Each country’s GHI score is classified by severity, from low to extremely alarming.
Undernourishment data are provided by the Food and Agriculture Organisation and child mortality data are sourced from the U.N. Inter-agency Group for Child Mortality Estimation (UN IGME). Child wasting and stunting data are drawn from the joint database of UNICEF, the World Health Organization (WHO) and the World Bank, among others.
-The Hindu (15.10.2021)