அரசாங்க வருவாய் நேரடி வரிகள்(Direct Taxes) (தனிநபர்கள் மற்றும் கம்பெனிகளின் வருமான வரி(Personal Income Tax and Corporate Income Tax)), மறைமுக வரிகள் (Indirect Tax) (கலால், சுங்கம், விற்பனை வரிகள்(Excise Duty, Customs Duty, Sales Taxes)), பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் லாபம்(Profits of Public Enterprises), முதலீடுகளில் இருந்து வரும் வட்டி(Interest Receipts), சேவைகளுக்கான கட்டணங்கள்(Service Charges) போன்ற மூலதன வருவாய்களிலிருந்து(Capital income) கிடைக்கிறது.
2021-22-க்கான யூனியன் வரவு செலவுத் திட்டத்தின்படி(Union Budget), மத்திய அரசின் மொத்த வருவாய் 35 லட்சம் கோடி ரூபாய் அதில் சுமார் 17 லட்சம் கோடி ரூபாய்கள் மூலதன வருவாயாக (Capital income) இருக்குமென்றும் மதிப்பிடப்பட்டுள்ளன. வரி விகிதத்தை(Tax Rate) அதிகரிப்பதன் மூலம் வருவாயைப், பெருக்குவது கடினமாக உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (GST) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாநிலங்கள் மது, பெட்ரோலியம், புகையிலை போன்ற ஒரு சில பொருட்களுக்கு மட்டுமே வரி விதிப்பது சாத்தியமாகியுள்ளது.
பொருளாதாரத்தில் தமிழ்நாடு நாட்டின் இரண்டாவது பெரிய மாநிலம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தின் நிதிநிலை தொடர்ந்து மோசமாகி வருகிறது. வருவாயை விட செலவினங்கள் மிக அதிகரித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை(Lack of funding) பெருகியுள்ளது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி தமிழகத்தின் மொத்த வருமானம் 2.08 லட்சம் கோடி ரூபாய்கள், மொத்தச் செலவு 3.29 லட்சம் கோடி ரூபாய்கள். மாநிலத்தின் நிதிப்பற்றாக்குறை சுமார் 92,529 கோடி ரூபாய்களாக உள்ளது. இதனை பொதுக் கடன் மூலமே ஈடுகட்ட வேண்டியுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் கடன் சுமைகளினால், தமிழ்நாட்டின் மொத்த பொதுக்கடன் சுமார் 7,00,000 கோடி ரூபாய்களுக்கு உயர்ந்துள்ளது. இதற்குச் செலுத்தும் வட்டி மட்டுமே ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய்களுக்கும் மேல். இது போன்ற ஒரு நிலை மத்திய அரசுக்கும் பொருந்தும். புதிய வரிகள் மூலம் இதனை ஈடுகட்ட இயலவில்லை. எனவே புதிய நிதி ஆதாரங்களைத்(Source of funding) திரட்டுவது முக்கியத்துவம் பெறுகிறது.
பொதுச்சொத்துக்களைப் பணமாக்குதல் (Monetisation of Public Assets) என்பது, அரசாங்கத்திற்கும் அதன் நிறுவனங்களுக்கும் உரிய பொதுச்சொத்துக்களின் பொருளாதார மதிப்பைத் திறந்து, புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்கும் செயல்முறையாகும். வரும் நான்கு ஆண்டுகளில் மத்திய அரசு இதன் மூலம் 6 லட்சம் கோடி ரூபாய்கள் திரட்ட முடியுமென்று கணக்கிடப்பட்டுள்ளது.
இச்சொத்துக்களைச் சார்ந்த நிலத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், உடனடியாக விற்பதன் மூலம் இந்த வாய்ப்பை அரசு இழந்துவிடும். அரசுச் சொத்துக்களை வாங்கும் தனியார் நிறுவனங்கள், இதன் மூலம் பல மடங்கு லாபம் சம்பாதிக்க இயலும். மக்கள் இதை வரவேற்கமாட்டார்கள். இதற்கு மாற்றாக, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பொதுச் சொத்துக்களைத் தனியாருக்குக் குத்தகைக்கு விடலாம் (Leasing Public Assets). குத்தகைக் காலம் முடிந்தவுடன் அச்சொத்து அரசுக்கு திரும்பக் கிடைக்கும். குத்தகைக்கு விடும் உத்தி பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
30 ஆண்டுகளுக்கு முன்பு சாலைகள் அமைக்கவும், அவற்றின் தரத்தை மேம்படுத்தவும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அரசு தனியார் துறையிடம் இப்பணியை அளித்தது. தனியார் நிறுவனங்கள் இதற்குத் தேவையான முதலீடுகளைத் திரட்டி முன்பணமாகச் செலவழித்து, சாலைக் கட்டுமானப் பணிகளை நிறைவேற்றின. அவர்கள் செய்த முதலீடுகளைச் சுங்க வரி மூலம் ஈடுகட்ட இந்த முறை வகை செய்தது. அரசாங்கமும் இதன் மூலம் கணிசமான லாபம் ஈட்ட முடிந்தது.
வாஜ்பாய் அரசின் தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின் மூலம் டெல்லி, கொல்கொத்தா, மும்பை, சென்னை தேசிய நெடுஞ்சாலைகள் நான்கு வழித்தடங்களாக குறுகிய காலத்தில் மேம்படுத்தப்பட்டன. சாலைப் போக்குவரத்து பெருகியது. இதே அடிப்படையில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பாலங்கள், விளையாட்டு அரங்கங்கள் போன்ற, பல தரப்பட்ட பொதுச் சொத்துக்களை குத்தகைக்கு விடுவதன் மூலம், அரசு பெருமளவில் நிதி திரட்ட முடியும். இவற்றைக் குத்தகை எடுக்கும் தனியார் நிறுவனங்கள், குறுகிய காலத்தில் இவற்றை மேம்படுத்தி, இதன் மூலம் தங்கள் வருவாயைப் பெருக்க முடியும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், அரசின் பொதுச் சொத்துக்கள் அரசிடமே இருக்கும். குத்தகை முடிந்த பிறகு இவை அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்படும். இது பொதுச்சொத்துக்களை மொத்தமாக விற்பனை செய்யும் திட்டமல்ல. குறிப்பிட்ட காலக் குத்தகைக்குப் பின் அந்தச் சொத்துக்கள் அரசுக்கே திரும்பும் என்கிற அடிப்படை அம்சத்தை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.
நீண்ட காலம் உலகளவிலும், மத்திய அரசின் நிதித்துறை மற்றும் திட்டத்துறையிலும் பெரும் பொறுப்புகளை வகித்த M.S.அலுவாலியா இத்திட்டத்தை வரவேற்றுள்ளார். இதனைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார். விதிமுறைகள் வெளிப்படையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும். தனியார் துறை போட்டியிட்டு இத்தகைய பொது நிறுவனங்களைக் குத்தகைக்கு எடுத்தால் இத்திட்டம் நன்கு செயல்படும் எனக் கூறுகிறார். முதலில் நடப்பு ஆண்டில் ஒரு ஐந்து திட்டங்களைத் தேர்ந்தெடுத்து, முதலீட்டாளர்களின் கருத்துக்களைக் கேட்டு வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்தலாம்.
Funds to be used to build new infrastructure, spur economic growth
The government will raise ₹88,000 crores this year by leasing infrastructure assets of central government ministries and state-run companies under a ₹6 trillion National Monetization Pipeline (NMP). The funds will then be used to build new infrastructure assets, helping boost economic growth in Asia’s third-largest economy.
Annual targets under the four-year pipeline have been set at ₹1.62 trillion for FY23, ₹1.79 trillion for FY24 and ₹1.67 trillion in the following year. The top five sectors by value under the government’s asset monetization programme are roads (27%), railways (25%), power (15%), oil and gas pipelines (8%) and telecom (6%). Among projects the government plans to lease are 26,700km of roads, 90 passenger trains, 400 railway stations, 28,608 circuit km transmission lines, 286,000km of Bharatnet fibre network and 14,917 towers owned by state-run Bharat Sanchar Nigam Ltd and Mahanagar Telecom Nigam Ltd.
Other core infrastructure assets that will be leased under NMP include airports in smaller cities, dedicated freight corridor assets, warehousing assets of state-run companies such as Central Warehousing Corp. and NAFED, and sports stadiums.