SOCIAL MEDIA: Fear around the world
ஜனநாயகத்தைத் தகர்க்கும் கோடரி
சமூக ஊடகங்கள் பேச்சுரிமையின் ஆணிவேர் என்று கூத்தாடிய Facebook, Twitter போன்ற கம்பெனிகளையும், தாராளவாதிகளையும் எதிர்த்து, 'கண்காணிக்கப்படாத சமூக ஊடகங்கள் ஜனநாயகத்துக்கே ஆபத்து' என்று அன்று துணிவாக உச்சநீதிமன்றம் கூறியது. இன்று உரிமைகளின் கோட்டையான அமெரிக்காவில் எதிரொலிக்கிறது. Facebook கம்பெனியில் பெரும் பொறுப்பில் இருந்த பெண் அதிகாரி ஒருவரே பிரச்னையை வெளிக்கொண்டு வருபவராக [whistle blower] மாறி, அது துவேஷத்தை, இனவெறியை, வன்முறையை வியாபார நோக்குக்காகத் தூண்டுகிறது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறார். அதேபோல் ஆஸ்திரேலியப் பிரதமர் சமூக ஊடகங்களை, "மறைந்திருந்து மற்றவர்களின் கௌரவத்தைக் குலைக்கும் கோழைகளின் கூடாரம்" என்று கடும் கோபப்பட்டுப் பேசியிருக்கிறார். 'ஜனநாயகத்துக்குப் பாலூட்டி வளர்க்கும்' என்று 5 ஆண்டுகளுக்கு முன்பு உலகமே போற்றிய சமூக ஊடகங்கள், இன்று ஜனநாயகத்தைப் பிளக்க வந்த கோடரி என்கிற அவப்பெயரை ஈட்டியிருக்கிறது.
துவேஷத்தை வளர்க்கும் முகநூல்
Facebook கம்பெனியின் முன்னாள் அதிகாரியான பிரான்சஸ் ஹோகன்(Frances Haugen) என்ற பெண்மணி, வேண்டுமென்றே சமுதாயத்திலும், அரசியலிலும் பிளவுகள் ஏற்படுத்தி, அதில் Facebook கம்பெனி லாபமடைகிறது - என்று கடுமையாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். அமெரிக்காவில் கம்பெனிகள் பங்குதாரர்களிடம் நிதி திரட்டுவதைக் கண்காணிக்கும் SEC அமைப்புக்கு, முகநூல் பற்றி அவர் அளித்த புகார்கள் வெளிவந்து, அமெரிக்க அரசாங்கத்தை மட்டுமல்லாமல், உலகையே அது உலுக்கியிருக்கிறது. கடந்த மே மாதம் Facebook ஐ விட்டு விலகிய Haugen, தான் கூறுவதை நிரூபிக்க பல்லாயிரக்கணக்கான பக்க ரகசிய ஆவணங்களைக் காட்டுகிறார்.
"உலகம் முழுவதும் மக்களை இணைக்கும் நோக்கம் கொண்ட செய்திப் பரிமாற்ற மேடை Facebook. மக்களுக்கு ஆத்திரமூட்டி, அவர்களைப் பிளவுபடுத்தும் கருத்துக்களை நுழைக்க வகை செய்யும் முறையை (algorithm) கையாளுகிறது. மக்களுக்கு ஆத்திரமூட்டி, இனவெறியை ஊட்டி, துவேஷத்தைப் பரப்பி, அவர்களை இரு துருவமாக்கி, பிளவுபடுத்தி, வன்முறை உருவானால்தான் Facebook அதிகம் உபயோகிக்கப்படும். அதனால் அதிக லாபம் வரும். இந்தக் குறிக்கோளை அடையத்தான் முகநூல், மக்களைப் பிரிக்கும் ஒரு ஊக்க முறையை அமலாக்கியிருக்கிறது" என்று அவர் பயங்கரமாக குற்றம் சாட்டியிருக்கிறார். "மக்களை இரு துருவமாக்கி பிளவுபடுத்தி, கோபம், விவாதம், வன்முறை போன்றவை ஊக்குவிக்கப்படவில்லை என்றால், முகநூல் செய்திகளுக்கு மகத்துவம் இருக்காது. 'செய்திகளுக்கு மகத்துவம் இல்லை என்றால் தங்களுக்கு வேலை உயர்வு, ஊக்க ஊதியம் கிடைக்காது என்பது முகநூலில் பணியாற்றுபவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதுதான் அவர்களை மக்களுக்குக் கோபமூட்டி பிளவுபடுத்தும் செய்திகளைப் பரப்புவதற்கு ஊக்குவிக்கிறது" என்கிறார் Haugen.
2020 - அமெரிக்கத் தேர்தலிலும், தேர்தலுக்குப் பின், 2021 - ஜனவரி 6 வாஷிங்டன் கலவரங்களிலும் வன்முறையைத் தூண்டும் செய்திகளை வேண்டுமென்றே Facebook கம்பெனி அனுமதித்தது' என்கிறார் Haugen. காரணம், அதன் மூலம் முகநூலின் உபயோகம் அதிகரித்து, அதிக லாபம் வருகிறது என்கிறார் அவர். 3-5 சதவிகிதம் துவேஷப் பதிவுகளுக்கும், 0.6 சதவிகிதம் வன்முறையைத் தூண்டும் பதிவுகளுக்கும் எதிராக மட்டுமே Facebook நடவடிக்கை எடுக்கிறது என்று, அதன் உள் ஆய்வே கூறுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். Haugen. குற்றச்சாட்டுகள் அத்துடன் நிற்கவில்லை.
மேலும் குற்றச்சாட்டுகள்
'Facebook மீது முக்கியமாக எட்டு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன' என்று கூறுகிறது Wall Street Journal.
- துவேஷத்தைத் தூண்டும் செய்திகள் பற்றிய Facebook-ன் அணுகுமுறை. (The company’s approach to hate speech.)
- வயதினரின் மனநலத்தைப் பாதிக்கும் பகிர்வுகள். (Its approach to teenage mental health.)
- இளம் மனித கடத்தல்களை கண்காணிப்பது. (Its monitoring of human trafficking.)
- துவேஷத்தை ஊக்குவிக்கும் செய்தியை வேண்டுமென்றே பரிமாறும் முறை. (How the company’s algorithms promoted hate speech.)
- முக்கியஸ்தர்களுக்குப் பாரபட்சமான முன்னுரிமை கொடுப்பது. (Preferential disciplinary treatment for VIP users.)
- இனவெறியைத் தூண்டுவது,
- வன்முறையைப் பரப்புவது. (Promoting ethnic violence.)
- வாடிக்கையாளர்கள் குறைந்து வருவது பற்றி பங்குதாரர்களுக்குத் தகவல் தராமல் இருப்பது. (Failing to inform investors about a shrinking user base in certain demographics.)
2019-லேயே Facebook மனிதக் கடத்தலையும், வீடுகளில் அடிமைத் தொழிலாளர்கள் அமர்த்தப்படுவதையும் ஊக்குவிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன என்கிறார் Haugen. அவருடைய கடுமையான குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த அன்று - அதாவது அக்டோபர் 2 - Facebook மட்டுமல்லாமல், Instagram, Whatsapp ஆகிய Facebook சேவைகள் உலகம் முழுவதும் 6 மணி நேரம் மாயமாய் மறைந்தன. இதற்கு என்ன காரணம் என்பதை யாரும் விளக்கவில்லை.
முன்னோடியான பாரதம்
உலகின் ஏழு கண்டங்களில், நான்கு கண்டங்களில் உள்ள நாடுகளில், சமூக ஊடகங்கள் மீது கட்டுப்பாடு அவசியம் என்கிற கருத்து உருவாகி வருகிறது. அது ஜனநாயகத்துக்கும், மனித உரிமைக்கும் ஆபத்து என்று 2019-ல் முகநூல் உரிமையாளர் மார்க் ஸுக்கர்பெர்க் (Mark Zuckerberg)குற்றம் சாட்டினார். பேச்சுரிமை என்ற பெயரில் அவரே துவேஷத்தையும், இனவெறியையும், வன்முறையையும், மனிதக் கடத்தலையும், இளம்வயதினர் மனநலன் பாதிக்கப்படுவதையும் ஊக்குவிக்கிறார் என்று கூறி, அவரது கம்பெனியில் இருந்தவரே அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்கிறார்.
தாராளவாத ஜனநாயக நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலேயே இன்று சமூக ஊடகங்கள் மீது கட்டுப்பாடு அவசியம் என்கிற கருத்து பரவி வருகிறது. கட்டுப்பாடு இல்லாமல் செய்திப் பரிமாறலை அனுமதிக்கும் Facebook மீது கட்டுப்பாடு அவசியம் என்று அமெரிக்க காங்கிரஸின் முன்பு Haugen சாட்சியம் கூறியதை, அமெரிக்க தாராளவாதக் கட்சியான ஜனநாயகக் கட்சியின் senators கூட ஆதரிக்கிறார்கள். ஆஸ்திரேலியப் பிரதமரும், சமூக ஊடகங்கள் மீது கட்டுப்பாடு அவசியம் என்று கூறுகிறார்.
எனவே, உலகையே எதிர்த்து சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த, 2021 பிப்ரவரி மாதமே மத்திய அரசு முடிவெடுத்தது. சமூக ஊடகங்களுக்கு நெருக்கடி தந்து, தான் கொண்டு வந்த விதிகளை ஒப்புக்கொள்ள வைத்தது இந்திய அரசு. இந்திய அரசு கொண்டுவந்த விதிகளை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் கொண்டுவர வேண்டும் என்று நிபுணர்கள் கூறுவதாகச் செய்தி கூட வந்திருக்கிறது. சமூக ஊடகங்கள் மீது கட்டுப்பாடு அவசியம் என்று கூறிய நமது உச்சநீதிமன்றமும், அதைக் கட்டுப்படுத்த தாராளவாதிகளை எதிர்கொண்டு விதிகள் வகுத்த மத்திய அரசும் பாராட்டுக்குரியது.
The Supreme Court early said such platforms with a potential to influence public opinion must be held accountable for spread of disruptive messages and hate speeches.
While dealing with the controversy over the Delhi Assembly committee summoning Facebook Vice-President Ajit Mohan for spread of hate messages during Delhi riots, a bench of Justices S K Kaul, Dinesh Maheshwari and Hrishikesh Roy said, “Entities like Facebook have to remain accountable to those who entrust them with such power.”
Writing the judgment, Justice Kaul said, “While Facebook has played a crucial role in enabling free speech by providing a voice to the voiceless and means to escape state censorship, we cannot lose sight of the fact that it has simultaneously become a platform for disruptive messages, voices, and ideologies.”
Australia’s prime minister lambasted social media as “a coward’s palace”, saying platforms should be treated as publishers when defamatory comments by unidentified people are posted, pouring fuel on a raging debate over the country’s libel laws.
The country’s highest court ruled that publishers can be held liable for public comments on online forums, a judgement that has pitted Facebook and news organisations against each other and spread alarm among all sectors that engage with the public via social media.
That in turn has lent new urgency to an ongoing review of Australia’s defamation laws, with the federal attorney general this week writing to state counterparts stressing the importance of tackling the issue.
“Social media has become a coward’s palace where people can go on there, not say who they are, destroy people’s lives, and say the foulest and offensive things to people, and do so with impunity,” Morrison told reporters in Canberra.
“They should have to identify who they are, and the companies, if they’re not going to say who they are, well, they’re not a platform anymore, they’re a publisher. You can expect us to be leaning further into this,” he added.