வாராக் கடன்களுக்கான தனி வங்கி சரியா?

மத்திய அரசால் National Asset Reconstruction Company Limited (NARCL) என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு, இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கான வங்கிகளின் வாராக் கடன்கள் மாற்றம் பெற இருக்கின்றன.

அவ்வாறு மாற்றம் அடையும் வாராக் கடன்களை பராமரித்து வசூல் செய்ய, Indian Debt Resolution Company Ltd என்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு, ரூபாய் 30,600 கோடிக்கு உத்தரவாதம் அளிக்க இசைந்துள்ளது. ஊடகத்தில் உலவிய பலவிதமான கருத்துக்களையும் புறந்தள்ளி இந்த அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.  அரசுத் தரப்பில் இந்த எதிர் கருத்துக்களுக்கு எந்தவிதமான பதிலும் கிடையாது.

இந்த அமைப்பினால் வங்கிகளின் வாராக் கடன்கள் குறையுமா? ஆமாம், வங்கிகளின் புத்தகங்களில் குறையும். அது சிறப்பு வங்கியின் புத்தகத்தில் நன்றாக உட்கார்ந்திருக்கும். வாராக் கடன்கள் வங்கிகளிலிருந்து மாற்றப்பட்டால், வங்கிகளின் balance sheet சுத்தமாகும் என்பது மற்றுமொரு வாதம். வீட்டில் படுக்கை அறையில் உள்ள குப்பையைத் தூக்கி ஸ்டோர் அறையில் போட்டால், நமது வீட்டிலிருந்து குப்பை வெளியே போய் விட்டதாகப் பொருளா? அதுபோல்தான் இதுவும்.

வாராக் கடன்கள் வங்கிகளில் இருந்தாலும், புதிய அமைப்பில் இருந்தாலும் ஒன்றே. இந்தப் புதிய முறை ஒரு கணக்கியல் வித்தை (accounting jugglery) மட்டுமே.

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள வாராக் கடன் வங்கிக்கோ (NARCL), அல்லது அதன் கடன் கணக்குகளை நிர்வகிக்கப்போகும் IDRCL க்கோ கடனை வசூலிக்க எந்தவிதமான சிறப்புத் தகுதியோ, அதிகாரமோ கிடையாது. வங்கிகளுக்கு வசூலிப்பதில் என்ன சட்ட திட்டங்களும், வரம்புகளும் உள்ளனவோ அவை மட்டுமே இதற்கும் பொருந்தும். பின் வங்கிகள் வசூலிக்க முடியாத கடன்களை இந்தப் புது அமைப்பு  எப்படி வசூலிக்கும்? உண்மையில் கடன் கொடுத்த வங்கிக்கு கடனாளியைப் பற்றி அதிக அனுபவம் இருக்கும். புதிய அமைப்பிற்கு அவ்வாறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை.

இந்த அமைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், இதனால் வங்கிகளின் கடன் வழங்கும் திறன் அதிகரிக்கும் என்று ஒரு காரணம் கூறுகிறார்கள். முதலாவது கட்டமாக, சுமார் 90,000 கோடி ரூபாய்க்கான வாராக் கடன்கள் புதிய அமைப்புக்கு  மாற்றப்பட உள்ளன. இதில் புதிய அமைப்பு, வங்கிகளுக்குப் 15%-ஐ பணமாகக் கொடுக்கும். அதன் மூலம் வங்கிகளுக்கு 13,500 கோடி ரூபாய் கிடைக்கும்.

ஆனால் வங்கிகளின் மொத்த கடனான ரூபாய் 1,09,49,509 கோடியுடன் (2020-21) ஒப்பிடும்போது, இது ஒன்றும் பெரிய தொகை இல்லை. எனவே, வங்கிகளின் கடன் வழங்கும் திறன் அதிகரிக்கும் என்பது சரியல்ல. ஏற்கெனவே ரிஸர்வ் வங்கியின் பண தாராள கொள்கையினால், வங்கிகளிடம் கடன் வழங்குவதற்கான போதிய கையிருப்பும் உள்ளது.

வங்கிகளுக்கு மீதமுள்ள 85 சதவிகிதத்திற்கு security receipt கிடைக்கும். இந்த security receipt-ஐ மற்றவர்களுக்கு விற்க முடியும். ஆனால், இந்த security receipt-ஐ வாங்குவதற்கு முதலீட்டார்கள் முன் வருவார்களா என்பது கேள்விக்குறி. அப்படியே வாங்கினாலும், எவ்வளவு கழிவு போக வாங்குவார்கள்? இது  வங்கிகளுக்கு மற்றுமொரு நஷ்டமே. பொதுவாக, இதுபோன்ற security receipts-ஐ குப்பை பத்திரம் (Junk bond) என்றுதான் வகைப்படுத்துவோம். தொடங்கப்பட்டுள்ள புதிய அமைப்பு, வாராக் கடன்களை வசூலித்த பின்னரே இந்த security receipts-க்குப் பட்டுவாடா செய்யும். முழுவதும் வசூல் செய்யவில்லையானால், துண்டு விழும் தொகைக்கு மத்திய அரசு ரூபாய் 30,600 கோடி வரை கியாரன்டி வழங்குகிறது. மத்திய அரசுக்கு உடனடியாக இந்தத் தொகை செல்லவில்லையானாலும், வரும் காலங்களில் இது செலவாகும். மொத்தத்தில், இதுவரை செய்த கடன் தள்ளுபடிகள் போக, இது வரி செலுத்துவோரின் பணத்தில் கடன்காரர்களுக்குச் செலுத்தும் கப்பமாகும்.

வங்கிகளுக்கான வாராக்கடன்களை குறைப்பதற்கான வழி கடன்களை வசூலிப்பதுதானேயொழிய, அந்தக் கடன்களை வேறு ஒரு நிறுவன அமைப்பிற்கு மாற்றுவது அல்ல. வாராக் கடன்களை இவ்வாறு மாற்றுவதற்கு வழி உண்டானால், வங்கிகள் மேலும் மேலும் பொறுப்பில்லாமல் கடன்களை வழங்கி, மற்றுமொரு வாராக் கடன் சூழலையே உருவாக்கும்.

கடன் வழங்கும் முன் சரியான மதிப்பீடுகளும், கடன் வழங்கிய பின்னர் சரியான கண்காணித்தலும் அவசியம். தோல்வியுற்ற நிறுவனங்களைக் காலத்தே கண்டறிந்து கணக்கை முடிப்பதும் அவசியம். வங்கிக் கடன்களைத் தவறாகப் பயன்படுத்தி ஏமாற்றிய நிறுவனங்களையும், அதன் நிறுவனர்களையும் உள்ளே தள்ளி, அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது அதைவிட அவசியம்.


All you need to know about NARCL or bad bank

Under the new framework, banks will aggregate and consolidate stressed assets with NARCL for resolution. Public sector banks will hold 51 percent ownership in NARCL.

NARCL will acquire fully provisioned stressed assets by making an offer to the lead bank in a consortium of lenders; once the offer is accepted, NARCL will engage with India Debt Resolution Company Ltd. (IDRCL) for management and resolution of the stressed assets. In IDRCL, private entities will maintain 51 percent ownership, with the government holding the rest.

NARCL will be starting with total capital of Rs 6,000 crore; it was incorporated in Mumbai in July 2021. SBI, Union Bank of India and Indian Bank have picked up a 13.27 percent stake each in NARCL. Punjab National Bank has acquired a 12 percent stake.

NARCL will acquire stressed assets of about Rs 2 lakh crore in a phased manner. The stressed assets will be acquired through a 15 percent upfront cash payment and 85 percent in the form of security receipts. The cabinet cleared the proposal to provide a government guarantee worth Rs 30,600 crore to security receipts issued by NARCL. The difference between the face value of the stressed asset from the realised value from the sale or liquidation of assets represent the guarantee offered by the government. The guarantee will be valid for a period of five years.

Under the process, the lead bank will go for the so-called Swiss Challenge form of public procurement in which other asset reconstruction companies will be invited to make offers to find the higher valuation of the stressed assets on sale.

The assets for sale will have been fully provided for by banks on their books. Banks have so far identified 22 bad loans amounting to Rs 90,000 crore which will be transferred to NARCL in the first phase.

IDRCL is a service company/operational entity established to manage the stressed assets and engage with market professionals including turnaround experts. Public sector banks and state-owned financial institutions will own a 49 percent stake in the entity and the rest by private-sector lenders.

Stressed assets acquired by NARCL will be managed by IDRCL for price discovery and value addition.