தமிழ்நாடு மொழிவழி மாநிலமாகப் பிரிந்து 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் அதன் பொன்விழா கொண்டாடப்பட்டது. சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்ற ஏனைய மாநிலங்கள் இந்த நாளை 'உதய தின' மாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. எனவே தமிழ் நாடும் இதில் பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியா பல பேசும் ஒரு துணைக்கண்டம். ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெறுவதற்காக மக்கள், தங்கள் மொழி, இன வேறுபாடுகளை மறந்து தேசியத் தலைவர்களை நம்பியே போராடினர். இரண்டாம் உலகப் போர் வந்ததும், ஆங்கிலேயர் தங்கள் காலனி நாடுகளை விட்டு வெளியேற வேண்டிய நெருக்குகடி ஏற்பட்டது.
இந்திய விடுதலைப் போராட்டம், வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்தபோது, மாநிலங்களின் பிரிவினைக்கான குரல்களும் எழுந்தன. தேசம் விடுதலை பெற்றதும் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கான கிளர்ச்சிகளும் வெடித்துக் கிளம்பின. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு அடக்கவும், அமைதிப்படுத்தவும் கருதி, இந்தியா முழுவதையும் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கும் திட்டத்தை அறிவித்தார்.
அவை, தட்சிண பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு பிரதேசம், கிழக்கு பிரதேசம், மத்திய பிரதேசம் என்பவையாகும். இதில் தட்சிண பிரதேசம் என்பது தமிழகம், கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய நான்கு மாநிலங்கள் அடங்கியதாகும். இத்திட்டத்தை மூதறிஞர் ராஜாஜி மட்டுமே வரவேற்றார்; ஈ.வெ.ரா. பெரியார் கடுமையாக எதிர்த்தார்; அண்ணாவும் கண்டனம் தெரிவித்தார். தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி.யின் பெருமுயற்சியால் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போராடின. எனவே, நேருவும் வேறு வழியில்லாமல் இத்திட்டத்தினைக் கைவிட நேர்ந்தது.
1953-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடும் சென்னை மாகாணத்தில் ஓர் அங்கமாகவே விளங்கியது. இந்தப் பல மொழிக் கூட்டில் சிக்கிக் கிடந்தவர்கள், தங்களுக்கு, தனியாக 'விசால ஆந்திரம்' வேண்டுமெனவும், ஐக்கிய கேரளம்' வேண்டுமெனவும் கோரிக்கை எழுப்பினர். இதற்காக 'ஆந்திர மகாசபை, 'கேரள சமாஜம்' போன்ற அமைப்புகளை உருவாக்கி கட்சி சார்பின்றி ஒன்றுபட்டு குரல் கொடுத்தனர்.
இதன் பிறகுதான் காங்கிரஸ் கட்சியிலிருந்து சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் முதன் முதலாக 'தமிழ் அரசு' அடைய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார். மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்படும்போது வேங்கடம் முதல் குமரி வரை தமிழகம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் புதிய தமிழ்நாடு அமைக்கப்பட வேண்டும் என விரும்பிய ம.பொ.சி. தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆதரவையும் பெற்று அறிக்கையும் வெளியிட்டார். 1948-ஆம் ஆண்டு ஒன்றுபட்ட சென்னை மாகாண சட்டமன்றத்தில் மொழிவழி மாநிலப் பிரிப்பை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொழிவழி மாநிலப் பிரிவினை பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட 'தார் குழு' 1948 செப்டம்பர் 13 அன்று சென்னைக்கு வந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரும் அக்குழுவிடம் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
தமிழக எல்லை மாநாட்டை தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி. 1949-இல் சென்னையில் நடத்தினார். மத்திய அரசின் நிதியமைச்சராக இருந்து, பதவியைத் துறந்த டாக்டர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் தலைமை வகித்தார். சென்னை மாகாண முதலமைச்சர் பி.எஸ். குமாரசாமி ராஜாவும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அம்மாநாட்டு முடிவில், வடவேங்கடம் முதல் தென்குமரி வரையுள்ள தமிழகத்தை அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தனி ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக 1953-ஆம் ஆண்டு, பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். அதன் பிறகு நேருவின் மனம் மாறியது. நாடாளுமன்றத்தில் ஆந்திர மாநிலம் அமைவதற்கான வாக்குறுதியை வழங்கினார்.
அப்போது 'சென்னை யாருக்கு' என்ற பிரச்னை எழுந்தது. சென்னை, தமிழகத்துக்கே உரியது என்பதை முடிவு செய்ய அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி, காங்கிரஸ் தலைவர் காமராசர், சென்னை மேயர் செங்கல்வராயன், முன்னாள் மேயர் எம். இராதாகிருஷ்ண பிள்ளை, தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி. முதலியவர்கள் கடுமையாகப் பாடுபட்டனர். அன்று மத்திய உள் துறையமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியையும், பிரதமர் நேருவையும் சம்மதிக்க வைப்பதற்கு பெரும்பாடுபட்டனர். 25.3.1953 அன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரபூர்வ பிரகடனத்தை வெளியிட்டார். இதில் ஆந்திராவின் தலைநகரம் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகே தமிழர்கள் நிம்மதியடைந்தனர்.
மொழிவழி மாநிலப் போராட்டத்தில் தமிழகத்தைப் பொறுத்தவரை தென் எல்லை மீட்புப் போராட்டமும், வடஎல்லை மீட்புப் போராட்டமும் முக்கியமானவை. தென் எல்லைப் போராட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்டது. இந்த வீரஞ்செறிந்த போராட்டத்தின் விளைவாகவே தெற்கு எல்லை கன்னியாகுமரியாகவே நீடிக்கிறது. இதில் மார்ஷல் நேசமணியின் பங்கு மிகப் பெரியது.
வட எல்லைப் பாதுகாப்புக்குழு ம.பொ.சி. தலைமையில் அமைக்கப்பட்டது. கே.விநாயகம் குழுவின் செயலாளர்; மக்களை அணி திரட்ட உதவியவர் மங்கலங்கிழார். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மத்திய சட்டத்துறை அமைச்சர் ஹெச்.வி.படாஸ்கரை விசாரணை அதிகாரியாக இந்திய அரசு நியமித்தது.
படாஸ்கர் பரிந்துரையின்படி, திருத்தணி தாலுகா முழுவதும் (ஒரு கிராமம் நீங்கலாக) சித்தூர் தாலுகாவில் 20 கிராமங்கள், புத்தூர் தாலுகாவில் ஒரு கிராமமாக 322 கிராமங்கள் ஆந்திரத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தமிழகத்துடன் சேர்க்கப்பட்டன. இந்த கிராமங்களின் மக்கள்தொகை 2,39,502. அதே போல தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர், பொன்னேரி தாலுகாக்களிலிருந்து சில கிராமங்கள் ஆந்திரத்துடன் சேர்க்கப்பட்டன. இந்தப் பெரும் போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தியாக மறவர்கள் ஏராளமானோர். போராட்டத்தின் உச்சகட்டமாக தனி ஆந்திர மாநிலம் அமைக்க வலியுறுத்தி 1953-இல் பொட்டி ஸ்ரீராமுலு உயிர் நீத்தார்; தமிழ்நாடு மாநிலம் கோரி உண்ணாவிரதம் இருந்து சங்கரலிங்கம் 1956 அக்டோ பர் 13 அன்று உயிர் துறந்தார்.
மொழிவழி மாநில அமைவுக்கு, மாநில முதலமைச்சர் பொறுப்பிலிருந்த ராஜாஜியின் பங்கும், அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜரின் பங்கும் குறிப்பிடத்தக்கவை. சென்னைதான் தலைநகர் என்று ஆந்திரர்கள் பிடிவாதமாக இருந்த போதும் ராஜாஜி அதனை ஏற்கவில்லை. அவர் பிரதமர் நேருவிடம், சென்னை பட்டணத்தை ஆந்திரர்களிடம் தருவது என மத்திய அரசு முடிவு எடுக்குமானால், அதை அமல்படுத்தும் சக்தி எனக்கு இல்லை. இந்த நிலையில் வேறு முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்' என்று கூறினார். பிரதமர் நேரு மனம் மாற இதுவும் ஒரு காரணம்.
மக்கள் விரும்பியபடி மாநிலம் அமைந்ததா? மாநிலப் பிரிவினை குறித்து எல்லா மாநிலங்களுக்கும் மனக்குறைகள் இருக்கின்றன. வட எல்லையான வேங்கடத்தை இழந்தது தமிழகத்திற்கு ஒரு குறையாகவே கருதப்படுகிறது. கருநாடக மாநிலத்தில் சேர்க்கப்பட்டுள்ள மராட்டியப் பகுதியான பெல்காம் மாவட்டத்தைத் திரும்பப் பெற மராட்டிய சமிதி தொடர்ந்து போராடி வருகிறது. இவ்வாறே இன்னும் பல.
இந்தச் சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டியதுதான். ஆனால் சில அரசியல்வாதிகள் சிக்கல்களுக்குத் தீர்வு ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்ளுவதிலேயே கவனமாக இருக்கின்றனர். மத்திய அரசு எப்போதும் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.
மொழி வழியான இந்தப் பிரிவினை; மாநிலங்களுக்கான பிரிவினையே தவிர, மக்களுக்கானது அல்ல. மொழி என்பது பிரச்னைகளுக்கு முடிவாக இருக்க வேண்டுமே தவிர தொடர்ந்துகொண்டே இருக்கக் கூடாது. மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற முழக்கம் மத்திய - மாநில அரசுகளின் இணக்கமாக இருக்க வேண்டும்.
தமிழ் இலக்கியங்களில் தமிழ்நாட்டின் எல்லைகள் பற்றிய குறிப்புகள் எங்கும் காணப்படுகின்றன. தமிழின் பழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திற்கு பாயிரம் பாடிய பனம்பாரனார்,
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
என தமிழ்நாட்டு எல்லையை வரையறை செய்துள்ளார்.
இந்தியா பல மொழி, பல இன மக்கள் கூடி வாழும் கூட்டாட்சி நாடு என்பதை மொழிவழி மாநிலப் பிரிவு உறுதி செய்கிறது. இதனை மத்தியில் ஆளுவோர் அடிக்கடி மறந்து விடுகின்றனர். இந்தியையும், சம்ஸ்கிருதத்தையும் மாநிலங்களின் மீது தொடர்ந்து திணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும். மாநிலப் பட்டியலில் இருந்த கல்வித்துறையை எடுத்துக் கொண்டது போல, மாநிலத் தன்னாட்சி அதிகாரங்களை எடுத்துக் கொள்ளும் போக்கை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
It was July 27, 1956. Congressman Sankaralinganar, in his 70s, started what was the first of many instances of the struggle for a cause: the renaming of Madras State to “Thamizhagam”. Sankaralinganar fasted for 76 days, which resulted in his death. Formerly called Madras Province, it had been renamed to Madras State on January 26, 1950.
Taking over the baton from him, a proposal to rename the state was made in the Assembly by the DMK in 1957 and 1963 and the Socialist Party in 1961.
However, the then ruling Congress party voted out the motion in all three occasions. Later the CPI too, took up the issue in the Parliament, where, again, the proposal was shot down by the majority Congress.
In 1963, DMK President CN Annadurai argued eloquently for the rechristening, quoting Tholkappiyam, the oldest literary work in Tamil, and Silappadhikaram, Tamil epic, to substantiate his claim that the name ‘Tamil Nadu’ has been in use for quite some time.
Meanwhile, the issue had been gathering political interest and garnered support from other political leaders. Ma Po Sivagnanam of the Thamizh Arasu Kazhagam joined Annadurai in the agitation for the rechristening. Before Independence, the geographical region extending from Odisha to Tirunelveli was called Madras Presidency, with the city of Madras as the capital. Odisha was formed in 1930, leaving Andhra Pradesh, Tamil Nadu, and parts of present day Karnataka and Kerala as Madras Presidency. From 1937 this became Madras Province and we started having elected governments. Andhra Pradesh was then carved out in 1953 after Potti Sriramulu died fasting for a separate Telugu state. This lead to the formation of states based on language, with Tamil Nadu still being called Madras State.
As for the movement to rechristen Madras State to Tamil Nadu, a tangible solution was arrived at when the DMK formed the government in Tamil Nadu in 1967 under CN Annadurai, who had by then become the face of the agitations for renaming the state. Annadurai brought about a resolution in July 1967, which was accepted in both Houses.
DMK swept to power in 1967. In 1968, Annadurai held the World Tamil Conference, and announced the rechristening of Madras State to Tamil Nadu. Annadurai was clear that Tamil had to be given importance.