தைவான் - சீனா ஓர் அரசியல் பார்வை

அக்டோபர் 1 சீனாவின் தேசிய தினம். அக்டோபர் 10 தைவானின் தேசிய

தினம். அகன்று விரிந்து கிடக்கும் நாடு சீனா. அருகில் ஒரு சிறிய இலையைப் போல் மிதக்கும் தீவு தைவான். இரண்டுக்கும் இடையே ஒரு நீரிணை(Taiwan Strait). அதன் அகலம் 130 கிமீ. ஆனால், அங்கே அரசியல் அலைகளுக்கு எப்போதும் குறைவிருக்காது. எனில், அக்டோபர் முதல் வாரத்தில் இந்த அலைகள் முன்னெப்போதைக் காட்டிலும் மேலுயர்ந்தன. காரணம், தைவானின் வான் பாதுகாப்பு வெளியின் மீது சீனாவின் 150-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் பறந்தன. பதற்றம் பற்றிக்கொண்டது.

'தைவான் சீனாவின் ஒரு பகுதி, அது இடையில் பிரிந்தது, மீண்டும் இணைத்துக்கொள்வோம்' என்பதுதான் சீனாவின் நிலைப்பாடு. அக்டோபர் 1 அன்று உரையாற்றிய சீன அதிபர் ஷி ஜின் பிங் (Xi Jinping) அதை மீண்டும் உறுதிப்படுத்தினார். ஆனால், தைவானின் பெருவாரியான மக்கள் அதை விரும்பவில்லை என்றார் தைவான் அதிபர் (சாய் இங் வென்) Tsai Ing-wen. அக்டோபர் 10 அன்று உரையாற்றிய அவர், சீனாவின் அழுத்தத்துக்குப் பணிய மாட்டோம் என்றார்.

வரலாற்றில் மிதக்கும் தீவு

இந்த உரசலின் வரலாறு நீண்டது. 16-ம் நூற்றாண்டில் தைவான் சுயேச்சையாக இருந்தது. அந்த நூற்றாண்டின் இறுதியில் சீனாவின் சிங் (Ch'ing) சாம்ராஜ்ஜியத்தின் கீழ் வந்தது தைவான். இது 17-ம் நூற்றாண்டின் இறுதி வரை நீடித்தது. முதலாவது, சீன-ஜப்பான் யுத்தத்தில் சீனா தோல்வியுற்றது; சீனாவின் Ch'ing அரசாங்கம், தைவானை ஜப்பானுக்குத் தாரை வார்த்தது. தைவான், ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் காலனியாக மாறியது. 1912-ல் சீனாவில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. கோமிங்டாங் (Kuomintang) கட்சி ஆட்சியைப் பிடித்தது. அந்த அரசுக்கு "சீனக் குடியரசு' (ROC-Registrar of Companies) என்று பெயர். அப்போதும் தைவான் ஜப்பானிய காலனியாகத்தான் இருந்தது. இரண்டாம் உலகப் போரில் சீனா, நேச நாடுகளின் (அமெரிக்கா-பிரிட்டன்-ரஷ்யா) கூட்டணியில் இருந்தது. ஜப்பான், அச்சு நாடுகளின் (ஜெர்மனி-இத்தாலி) கூட்டணியில் இருந்தது. நேச நாடுகள் வென்றன. 1945-ல் ஜப்பான் சரணடைந்தது. சீனக் குடியரசின் ஆட்சி தைவானுக்கும் நீண்டது.

எதிரிகளாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியும் Kuomintang கட்சியும் 1937 முதல் இணைந்து, பொது எதிரியான ஜப்பானை எதிர்த்தன. ஜப்பானின் தோல்விக்குப் பிறகு, செம்படை தனது துப்பாக்கிகளை Kuomintang படைக்கு எதிராகத் திருப்பியது. உள்நாட்டு யுத்தம் உக்கிரமானது. 1949-ல் கம்யூனிஸ்ட் கட்சி வென்றது, மக்கள் சீனக் குடியரசை நிறுவியது. Kuomintang கட்சியினரும் அதன் தலைவர் சியாங் கை ஷேக்கும் தைவானுக்குத் தப்பியோடினார்கள். சீனாவின் பொன்னையும் பொருளையும் கொண்டுபோனார்கள். தைவானில் தங்கள் ஆட்சியை நிறுவினார்கள். இந்த ஆட்சி சில மாதங்களே தாக்குப்பிடிக்கும் என்று அப்போது கருதப்பட்டது. ஆனால், கொரிய யுத்தம் கணக்குகளை மாற்றிப் போட்டது. கொரிய யுத்தத்தில் சோவியத் ரஷ்யாவும் அமெரிக்காவும் முறையே வட, தென்கொரியாக்களை ஆதரித்தன. சீனா, வடகொரியாவுக்கு ஆதரவாகக் களம் இறங்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால், 1950-ல் பிலிப்பைன்ஸுக்கும் ஜப்பானுக்கும் இடையில் உள்ள தைவானில் அமெரிக்கா தனது ராணுவத் தளத்தை நிறுவியது. கிழக்காசியச் சமன்பாடுகள் மாறிப்போயின.

இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் 1945-ல் அமைக்கப்பட்ட ஐநாவில், veto அதிகாரமுள்ள பாதுகாப்பு கவுன்சில் இடங்களை நேச நாடுகள் பங்கு போட்டுக்கொண்டன. அப்போது சீனாவை ஆண்டு வந்த கோமிங்டாங் அரசுக்கு ஒரு இடம் கிடைத்தது. ஆனால், உள்நாட்டு யுத்தத்தில் தோற்று, அது தைவான் அரசாகச் சுருங்கிப்போனபோதும் அந்த இடத்தை Kuomintang-கே அனுபவித்து வந்தது. இதற்கு மேற்கு நாடுகளின் சம்மதமும் இருந்தது. இந்த இடம் அகண்ட சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசுக்கு வழங்கப்படுவதுதான் நியாயமாக இருக்கும் என்று குரல் கொடுத்த நாடுகளில் ஒன்று இந்தியா. 1971-ல்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு ஐநாவின் நிரந்தர உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டது. தைவான் (ROC) வகித்து வந்த பாதுகாப்பு கவுன்சில் இடம் சீனாவுக்கு (PRC-People’s Republic of China) கைமாறியது. சீனா என்கிற பெயர் Beijing-ஐ தலைநகராகக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு மட்டுமே உரித்தானது. தைவானை அங்கீகரிக்கும் எந்த நாட்டுடனும் சீனா ராஜீய உறவு வைத்துக்கொள்வதில்லை. இதனால் அமெரிக்கா, இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றுக்கும் தைவானோடு ராஜிய உறவுகள் இல்லை. எனினும், பல நாடுகளும் தைவானோடு 'அலுவல் சாராத'(Unofficial) உறவைப் பேணுகின்றன. இந்திய அரசின் 'இந்திய தைபை சங்கம்'(Indian Taipei Association) தைவானின் தலைநகர் தைபையில் இயங்குகிறது. ஒலிம்பிக் போட்டிகளிலும் உலக சுகாதாரம்/வணிகம் போன்ற அமைப்புகளிலும் தைவான் 'சீனத் தைபை'(Chinese Taipei) என்கிற பெயரில் பங்கெடுக்கிறது. 

தைவான் அற்புதம்

மேலும், 1950 முதற்கொண்டு ராணுவ உதவிகளை மட்டுமல்ல பொருளாதார உதவிகளையும் தைவானுக்கு அமெரிக்கா வாரி வழங்கியது. உதவிகளைச் செம்மையாகப் பயன்படுத்திக்கொண்ட தைவான், உள்கட்டமைப்பு, தொழில், வேளாண்மை என்று எல்லாத் துறைகளிலும் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறியது. 2.3 கோடி மக்கள்தொகையே உள்ளபோதும் வளர்ந்த நாடுகளின் பட்டியலில்தான் வைக்கப்பட்டிருக்கிறது தைவான். 1965-க்கும் 1985-க்கும் இடைப்பட்ட 20 ஆண்டு காலத்தில் தைவானின் பொருளாதாரம் 360% உயர்ந்தது என்கின்றன புள்ளிவிவரங்கள். இந்த அற்புதம் ராணுவ ஆட்சியில்தான் நடந்தது என்பது ஒரு வினோதம். 1949 முதல் 1987 வரை தைவானில் Kuomintang-ன் ராணுவம்தான் கோலோச்சியது. 1980-ல் ஜனநாயக ஒளிக்கதிர் பரவத் தொடங்கியது. 1987 முதல், முறையான தேர்தல்கள் நடந்துவருகின்றன. இப்போது ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கோமிங்டாங் எதிர்க் கட்சி, 

ஒற்றை சீனா 

தைவான், திபெத், ஹாங்காங் உள்ளிட்ட 'ஒற்றைச் சீனா'வை(One-China policy) கட்டுவதுதான் சீன அரசின் லட்சியம். ஹாங்காங்கைப் போல தைவானையும் ஒரு சிறப்பு நிர்வாகப் பகுதியாக மாற்றுவோம் என்று சொல்லிவருகிறது சீனா. ஹாங்காங் ஆட்சிக்கு 'ஒரு தேசம் ஈராட்சி முறை' (One country, Two systems) என்று பெயர். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சுயாட்சிமிக்க மாநிலம் என்பது பொருள். அரசமைப்புச் சட்டம் தனியானது. நாணயம் வேறானது, சட்டமன்றம் இருக்கும். தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த மாதிரியைத்தான் தைவானுக்கு முன்மொழிகிறது சீனா. ஹாங்காங்கில் மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டம், ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது என்பது ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் வாதம். Kuomintang கட்சி, இயன்ற வரை சீனாவுக்கு இணக்கமாகப் போக விரும்புகிறது. ஜனநாயக முன்னேற்றக் கட்சி சீன எதிர்ப்பில் தீவிரமாக இருக்கிறது. எனில், இந்தத் தர்க்கங்கள் எதுவும் சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான வணிக உறவுகளுக்குத் தடையாக இல்லை. தொண்ணூறுகளுக்குப் பிற்பாடு பரஸ்பர வணிகமும் முதலீடுகளும் (Mutual trade and Investments) அதிகரித்துவருகின்றன. 2019-ல் தைவான்-சீனா வணிக உறவின் மதிப்பு ரூ.11 லட்சம் கோடி (ஒரு ஒப்பீட்டுக்கு, இதே கால கட்டத்தில் இந்திய-சீன வணிக உறவு ரூ 6.5லட்சம் கோடி) வணிக உறவு செழித்தாலும் பெரும்பான்மை தைவானியர்கள் சீனக் குடையின் கீழ் ஒதுங்க விரும்பவில்லை என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். என்றாவது தைவானை சீனாவுடன் ஒன்றிணைத்தே தீருவோம், அதைச் சமாதான வழியில்தான் செய்வோம் என்கிறது சீனா. ஆனால் சீனா, ராணுவ மார்க்கத்தை நாடும் என்று கருதுகிறது தைவான். இடையிடையே அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் தைவான் நீரிணையில் மிதக்கின்றன. 'தைவானைக் கேடயமாகப் பயன்படுத்தி சீனாவை எதிர்கொள்ள முயல்கிறது அமெரிக்கா' என்று குற்றம் சாட்டுகிறது சீனா. இதற்கிடையில்தான் சீனப் போர் விமானங்கள் தைவான் ஆகாயத்தில் பறந்தன. நீரிணையில் அரசியல் அலைகள் உயர்வதும் தாழ்வதும் மாறிமாறி நிகழ்கின்றன.

அமெரிக்க முப்படை தளபதி

"சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பமாகும்' என்றார் அமெரிக்கா ராணுவத்தளபதி மார்க்மில்லே.

தைவானை தங்களது நாட்டின் ஒரு மாகாணமாக சீனா கருதி வருகிறது. அந்த நாட்டை தங்களுடன் மீண்டும் இணைத்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் அதற்காகத் தேவைப்பட்டால் ராணுவ பலம் கூட பயன்படுத்தபடும் எனவும் சீனா கூறி வருகிறது.  தைவானில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பிரிவினைவாத இயக்கம் என சீனா குற்றம் சாட்டி வருகிறது. தைவானோ, தாங்கள் ஏற்கெனவே இறையாண்மை கொண்ட தனி நாடாக இயங்கி வருவதாகவும் சீனாவிடமிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறி வருகிறது. இந்தச் சூழலில், தைவான் எல்லைக்குள் இதுவரை இல்லாத அளவுக்கு சீனப் போர் விமானங்கள் ஊடுருவி பரபரப்பை ஏற்படுத்தின. சீனாவின் இந்த நடவடிக்கை, கடந்த, 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தைவான் அதிபர் Tsai Ing-wen குற்றம் சாட்டினார். வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் தங்கள் நாட்டை சீனா ஆக்கிரமிக்கக் கூடும் என்று தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சர்  Chiu Kuo-cheng தெரிவித்தார். அந்த அச்சத்தை உறுதிப்படுத்தும் வகையில், தங்கள் நாட்டுடன் தைவான் 'அமைதியான வழியில்' இணைக்கப்படும் என்று சீன அதிபர் Xi Jinping பின்னர் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் அந்தத் தீவுக்கு அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கும் என்று தெரிவித்து அதிபர் ஜோ பைடனும் பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்தச் சூழலில், சீனாவின் தாக்குதலில் இருந்து தைவானைப் பாதுகாக்கும் வலிமை தங்களுக்கு இருப்பதாக அமெரிக்க முப்படைகளின் தலைமைத் தளபதி தற்போது கூறியுள்ளார்.


Chinese-claimed Taiwan has complained for a year or more of repeated missions by China’s air force near the self-ruled island, often in the southwestern part of its air defence zone near the Taiwan-controlled Pratas Islands.

Recently, 19 Chinese aircraft including nuclear-capable bombers had flown into Taiwan’s air defence identification zone. In response, Taiwanese combat aircraft were dispatched to warn away the Chinese aircraft, while missile systems were deployed to monitor them.

Rationale behind such acts:

China often mounts such missions to express displeasure at something Taiwan has done or at shows of international support for the democratically ruled island, especially by the United States, Taiwan’s main arms provider.

China has described its activities as necessary to protect the country’s sovereignty and deal with “collusion” between Taipei and Washington.

Main issues?

China has increased diplomatic, economic and military pressure on Taiwan, whose residents overwhelmingly reject Beijing’s demand for political unification with the mainland.

China has long blocked Taiwan from taking part in the UN and other international organizations and has stepped up such pressure since the election of Taiwanese President Tsai Ing-wen in 2016.

China- Taiwan relations- Background:

China has claimed Taiwan through its “one China” policy since the Chinese civil war forced the defeated Kuomintang, or Nationalist, to flee to the island in 1949 and has vowed to bring it under Beijing’s rule, by force if necessary. While Taiwan is self-governed and de facto independent, it has never formally declared independence from the mainland.

Under the “one country, two systems” formula, Taiwan would have the right to run its own affairs; a similar arrangement is used in Hong Kong. Presently, Taiwan is claimed by China, which refuses diplomatic relations with countries that recognise the region.

Indo- Taiwan relations:

Although they do not have formal diplomatic ties, Taiwan and India have been cooperating in various fields. India has refused to endorse the “one-China” policy since 2010.