ஒரே செடியில் இரண்டு காய்கறிகள் "பிரிமேட்டோ' (Brimato)


உத்திர  பிரதேசத்தின் வாரணாசியில் I.C.A.R. எனப்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உள்ளது. இதன்  கட்டுப்பாட்டில் உள்ள I.I.V.R. எனப்படும் இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளனர். அந்த ஆராய்ச்சியின் முடிவில் தக்காளி மற்றும் கத்தரிக்காய்களை  ஒரே செடியில் வளர்க்கும் நுட்பதை அவர்கள் கண்டறிந்து உள்ளனர். அந்த செடிக்கு 'பிரிமேட்டோ'(Brimato) எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஒரு செடியின் பாகத்தை மற்றொரு செடியின் தண்டில் இணைத்து வளர்க்கப்படும் முறை வாயிலாக இந்த புதிய செடி வளர்க்கப்பட்டுள்ளது.  ஒரு பிரிமேட்டோ செடியில் 3 - 4 கிலோ கத்தரிக்காய் மற்றும் 2- 3 கிலோ தக்காளிகள் வரை காய்க்கும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

ஒரே தாவரத்தில் இருந்து இரண்டு விதமான காய் கறிகளை உற்பத்தி செய்யும் இந்த புதிய முறை, சராசரி செடி வளர்ப்பில் உள்ள சவால்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும். சிறிய இடங்களில் இந்த செடியை எளிதில்  வளர்க்கலாம்.

இதற்கு முன்பு வரை பழங்கள் மற்றும் பூக்களுடன் இந்த முறை நிறுத்திக்  கொள்ளப்பட்டது. தற்போது காய்கறி உற்பத்தியிலும் இது பின்பற்றப்படுகிறது. இதனால்  செலவுகள் குறையும்; பயிர்களில் ரசாயன இருப்பும் குறையும்.

இந்த பிரிமேட்டோ செடியின் விலை 4.5 ரூபாயாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பல விதமாள செடிகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.


Scientists at the Indian Council of Agriculture Research’s Indian Institute of Vegetable Research (ICAR-IIVR) in Varanasi have successfully developed a technique to cultivate a plant that yields both brinjals and tomatoes. They have named it ‘Brimato’. Each ‘Brimato’ plant is estimated to yield 3-4 kilograms of brinjal and 2-3 kilograms of tomato.

The IIVR has previously successfully grafted a plant named ‘Pomato’, which yields a combination of potatoes and tomatoes.

Brimato was developed through dual or multiple grafting, wherein two or more ‘scions’ of the same plant family are grafted together to harvest more than one vegetable from a single plant. The parent plants of the Brimato are an enhanced brinjal hybrid known as ‘Kashi Sandesh’ and an improved variety of tomato ‘Kashi Aman’, which were grafted into the brinjal rootstock known as IC 111056. This new method of producing two vegetables from the same plant will help meet current nutritional and productivity challenges arising out of a lack of space for cultivation.

Earlier, this was restricted to flowers or fruits, but we have expanded it to vegetables. Brimato will be very helpful in terms of nutritional security — it is the best method to ensure domestic nutrition as prices of vegetables increase. It also reduces costs and residual toxicity, with low chemical presence in crops, Brimato can be developed merely at a cost of Rs 10-11, and a month in duration. With an adaptation of this to a large commercial scale, which is being tried, the plant availability price will also reduce to Rs 4-5 per plant.