இந்தியாவின் நிலக்கரிப் பயன்பாடு (Coal Consumption of India)


கடந்த 09-10-2021 அன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமர்

மோடிக்கு எழுதிய கடிதத்தில், நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு ஏற்படும் என்று எழுதினார். இந்த விஷயம் மீடியாவில் பூதாகரமாகி, நிலக்கரி பற்றாக்குறையினால் நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் என்ற செய்தி பரபரப்பானது. 

நிலக்கரி உற்பத்தியில், ஆகஸ்ட்-செப்டம்பர் மழைக்குப் பிறகு எந்தப் பின்னடைவும் இல்லை. Coal India என்ற இந்திய அரசு நிறுவனம், 80 சதவிகித நிலக்கரியை தினசரி உற்பத்தி செய்துதான் வருகிறது. ரயில், கப்பல்கள் மூலம் நாடெங்குமுள்ள 135 அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி அனுப்பி வைக்கப்படுவதிலும் எந்தப் பின்னடைவும் இல்லை. அப்படியானால், 'நிலக்கரி தட்டுப்பாடு' என்ற செய்தி பரவக் காரணம் என்ன? கேஜ்ரிவால், 'டெல்லியில் நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு வரும்' என்று பிரதமருக்கு ஏன் கடிதம் எழுதினார்?

பொதுவாக அனல்மின் நிலையங்கள், கணிசமான அளவு நிலக்கரியை ஸ்டாக் வைத்துக் கொள்ளும். கடந்த 08-10-2021 கணக்குப்படி, 80 சதவிகித இந்திய அனல் மின் நிலையங்களில், 8 நாட்களுக்குப் போதுமான நிலக்கரி கையிருப்பு இருக்கிறது. ஒருபுறம், பொருளாதார நடவடிக்கைகள் கொரோனா தொற்றுக் குறைவினால் சீரடைந்து முன்னேறியுள்ளது. இதனால் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது. இன்னொருபுறம், மாநில அரசுகள், அடுத்த கொரோனா அலை வரக்கூடும், அதனால் மின்சாரத் தேவை குறையும் என்ற எதிர்பார்ப்பில் அனல் மின் நிலயங்களின் நிலக்கரிக் கையிருப்பை குறைத்துக் கொண்டன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதுதான் அனல் மின் நிலைய நிலக்கரிக் கையிருப்புக் குறைய முக்கியமான காரணம் என்கிறார்கள்.  இப்போது பண்டிகை காலம் வருவதால் மின்சாரத் தேவை அதிகரிக்கவே செய்யும்.

நிலக்கரிச் சுரங்கங்கள் தங்கள் பணியைத் தொய்வின்றிச் செய்து கொண்டிருக்கின்றன. நிலக்கரிக்கு தட்டுப்பாடும் இல்லை. அனல்மின் நிலையங்களின் கையிருப்பு என்பது, அந்தந்த மாநிலங்களிலுள்ள நிலவரத்தைப் பொறுத்தது. நிதிவசதி இருந்தால் இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து கூட நிலக்கரியை இறக்குமதி செய்து கொள்ளலாம். தடை ஏதுமில்லை. நிலக்கரி இறக்குமதிக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. யார் வேண்டுமானாலும் இறக்குமதி செய்து கொள்ளலாம். 

ஸ்டீல், காகிதம், சிமென்ட் ஆலைகளுக்கும் நிலக்கரி தேவைப்படுகிறது. Coking coal என்ற, அதிக வெப்பம் தரும் நிலக்கரியை, இந்தத் தொழிற்சாலைகள் வெளிநாடுகளிலிருந்தே தருவித்துக் கொள்கின்றன. இருந்தாலும் கடந்த 2020 ஜூலை-ஆகஸ்ட் மாத நிலக்கரி இறக்குமதியுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 12.62 சதவிகித இறக்குமதி குறைந்துள்ளது. உலகிலேயே இரண்டாவது பெரிய நிலக்கரி இறக்குமதியாளர் நாம்தான். இந்திய நிலக்கரியின் விலை ஜூன் 21-ல் 1 டன் 6,500 ரூபாய்.

தமிழ்நாடு உள்பட மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உ.பி., ம.பி. முதலான மாநிலங்கள் நிலக்கரி வாங்கிய வகையில் பாக்கி வைத்துள்ளன. மகாராஷ்டிரா எதனாலோ தனது சில அனல் மின் நிலையங்களை (13) நிறுத்தி வைத்துள்ளது. ராஜஸ்தானிலும், பிஹார், ஜார்கண்டிலும் 14 மணி நேர மின் வெட்டு உள்ளது. பஞ்சாபிலும் மூன்று அனல் மின் நிலையங்கள் செயல்படவில்லை. அங்கு 6 மணி நேர மின் வெட்டு அமலில் உள்ளது. இந்த மாநிலங்களில் மின்வெட்டு இருப்பதற்குத் தனித்தனிக் காரணங்கள் இருக்கலாம். ஆனால், நிச்சயம் நிலக்கரித் தட்டுப்பாட்டினால் இல்லை. நிலக்கரித் தட்டுப்பாடு என்பது தவறான செய்தி. நாம் பங்களாதேஷுக்கும், நேபாளத்துக்கும் நிலக்கரி ஏற்றுமதி செய்கிறோம் என்கிற நிலையில், உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட வழியில்லை.

  • The stock available with Coal India Limited (CIL) stands at more than 400 lakh tonnes. It is the CIL stock which is being supplied to power plants. 

  • The stock available at power plants is boosted by supplies from coal companies on a daily basis and the supply chain has not broken at all. 

  • In what is the highest-ever “H-1” supply from CIL to the power sector, more than 225 metric tonnes (MT) of coal were provided to the power sector this year. This was achieved despite heavy rain in the coalfield areas. 

  • The supply is set to increase to 16 lakh MT per day from the existing daily capacity of more than 14 lakh MT. Also, the supplies are likely to reach a record high in the current financial year. 

  • Ample coal stock is available in the country, and fear of disruption in the power supply is “misplaced.”