அரசியல் சட்டத்தின் 130 ஆவது பிரிவின்படி, குடியரசுத் தலைவருடன் அதாவது மத்திய அரசுடன் - கலந்தாலோசித்து, மற்ற இடங்களில் இதன் கிளைகளை அமைப்பது பற்றித் தலைமை நீதிபதி முடிவு எடுக்கலாம். ஆனால், இதுவரை எந்தத் தலைமை நீதிபதியும் இது விஷயத்தில் முன் முயற்சி எடுக்கவில்லை. இந்தப் பின்னணியில்தான், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், 'டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னையில் உச்சநீதிமன்ற அமர்வுகளை அமைக்க வகை செய்து, நாடாளுமன்றம் 130-ஆவது பிரிவைத் திருத்தம் செய்யக்கோரி, தனி உறுப்பினர் மசோதாவைக் கொண்டு வந்தார்.
இப்போது, இணைய வழி விசாரணைகள் நடப்பதால், வெளியூர் வழக்கறிஞர்களுக்கோ, கட்சிக்காரர்களுக்கோ எந்தப் பிரச்னையும் இல்லை. அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, உச்சநீதிமன்ற வழக்குகளில் வாதிடலாம். ஒருவேளை, பழையபடி நேரடி விசாரணை கொண்டு வரப்பட்டால், நாட்டின் பல பகுதிகளிலும் இருப்போர் டெல்லி செல்வது ஒரு பிரச்னைதான், அதைத் தீர்க்க, நான்கு திசைகளிலும் நாலு அமர்வுகளை ஏற்படுத்தலாம் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்து.
1984-ல், 85-ஆவது சட்டக் கமிஷன், உச்சநீதிமன்றத்தை, அரசியல் சட்டப் பிரிவு, பொது சட்டப் பிரிவு என்று இரண்டாகப் பிரிக்கலாம் என்று பரிந்துரை செய்தது. 2009-ல் அதன் 229-வது அறிக்கையில், டெல்லி, (கொல்கத்தா சென்னை, மும்பையில் 4 அமர்வுகளை அமைக்கலாம் என்றும், அரசியல் சட்ட விஷயங்களையும், ஏனைய அன்றாட விஷயங்களையும் டெல்லி அமர்வு பரிசீலனை செய்யலாம் என்றும் பரித்துரை செய்தது. தொலைதூரப் பகுதியில் வசிப்பவர்கள், நீதியை நாடி டெல்லி செல்வது கடினமாக இருப்பதால், பல்வேறு நாடாளுமன்ற நிலைக் குழுக்களும், வெளி அமர்வுகளை அமைக்கலாம் என்று பரிந்துரை செய்தன. சென்ற மார்ச் மாதத்தில் கூட இத்தகைய பரிந்துரை வெளிவந்தது. சம வாய்ப்புக்களின் அடிப்படையில் நீதியை அரசு ஊக்குவிக்க வேண்டும். பொருளாதார, மற்றக் குறைபாடுகள் காரணமாக யாருக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது என்று அரசியல் சட்டத்தின் 39A பிரிவு கூறுகிறது. இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று ஒரு கருந்து நிலவுகிறது. வி.வசந்தகுமார் தாக்கல் செய்து பொது நல வழக்கை, உச்ச நீதிமன்றம் 2016 ஜுலையில், அரசியல் சாஸனப் பிரிவுக்கு மாற்றியது.
Article 39A of the Constitution of India provides free legal aid to the poor and weaker sections of the society and ensures justice for all. Articles 14 and 22(1) of the Constitution also make it obligatory for the State to ensure equality before the law and a legal system that promotes justice on the basis of equal opportunity to all. In the year 1987, the Legal Services Authorities Act was enacted by the Parliament which came into force on 9th November 1995 to establish a nationwide uniform network for providing free and competent legal services to the weaker sections of the society on the basis of equal opportunity. The National Legal Services Authority (NALSA) has been constituted under the Legal Services Authorities Act, 1987 to monitor and evaluate the implementation of legal aid programmes and to lay down policies and principles for making legal services available under the Act.
In every State, a State Legal Services Authority and in every High Court, a High Court Legal Services Committee have been constituted. District Legal Services Authorities, Taluk Legal Services Committees have been constituted in the Districts and most of the Taluks to give effect to the policies and directions of the NALSA and to provide free legal services to the people and conduct Lok Adalats in the State.
Supreme Court Legal Services Committee has been constituted to administer and implement the legal services program insofar as it relates to the Supreme Court of India.