பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை (Xenotransplantation)


சோதனை முயற்சியாக மரபணு மாற்றப்பட்ட கால்சேப் (GalSafe) என்றழைக்கப்படும் பன்றிகளின் உடலுறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்த பரிசோதனைகள் நடைபெற்று வந்தது.

நியூயார்க்கை சேர்ந்த NYU Langone மருத்துவமனையில் மூளைச் சாவடைந்த ஒருவரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் இருந்தது. Dr.Robert Montgomery தலைமையில் மருத்துவ  நிபுணர்கள் பாதிக்கப்பட்ட அவருடைய குடும்பத்தினரின் அனுமதியைப் பெற்று அவருக்கு பன்றியினுடைய சிறுநீரகத்தை பொருத்தினர்.

பன்றியின் சிறுநீரகம் பாதிக்கப்பவரின் உடலுக்கு வெளியே வைத்து அவரின் மேல் காலில் ரத்தக் குழாய்களில் இணைக்கப்பட்டு, 54 மணிநேரம் பராமரிக்கப்பட்டது. பன்றியின் சிறுநீரகம் மூளைச் சாவடைந்த நபரின்  நோயெதிர்ப்பு மண்டலத்தால்(immune system) நிராகரிக்கப்படாமல் சீராக இயங்கியது.

சோதனையின் முடிவுகள் மிகவும் நம்பிக்கையளிப்பதாகவும் பன்றியின் சிறுநீரகம் சிறப்பாக செயலாற்றி மனித உடலின் கழிவுகளை வடிகட்டியதாகவும் தெரிவித்தனர். பன்றிகளுக்குள் மனித திசுக்கள் மற்றும் உறுப்புகளை வளர்த்து பின்னர் அறுவை சிகிச்சை மூலம் மனிதனுக்கு பொருத்துவது குறித்த பரிசோதனைகளும் நடைபெற்று வருகிறது. இவை செயல்பாட்டுக்கு வந்தால்  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கு லட்சக்கணக்கானோர் காப்பாற்றப்படுவார்கள்.


For the first time, a pig kidney has been transplanted into a human without triggering immediate rejection by the recipient's immune system, a potentially major advance that could eventually help alleviate a dire shortage of human organs for transplant.

The procedure done at NYU Langone Health in New York City involved the use of a pig whose genes had been altered so that its tissues no longer contained a molecule known to trigger almost immediate rejection. The recipient was a brain-dead patient with signs of kidney dysfunction whose family consented to the experiment before she was due to be taken off of life support. 

For three days, the new kidney was attached to her blood vessels and maintained outside her body, giving researchers access to it. Throughout that period, in a major first step for the realm of xenotransplantation, the human host didn’t immediately reject or experience any serious immune response to the organ.

The pig’s genes had been edited to remove a sugar molecule from its tissues that have been linked to organ rejection in previous xenotransplants. The genetically altered pig, dubbed GalSafe, was developed by United Therapeutics Corp’s (UTHR.O) Revivicor unit. It was approved by the U.S. Food and Drug Administration, for use as food for people with a meat allergy and as a potential source of human therapeutics.

Other researchers are considering whether GalSafe pigs can be sources of everything from heart valves to skin grafts for human patients. The reported results are certainly promising for millions of people currently waiting for donor organs and the physicians and scientists who have long been on the hunt for an effective and sustainable alternative to human donations.